அரசு மருத்துவமனை டாக்டர்களான 2 திருநங்கைகள் - தடைகளை தாண்டி சாதனை!

Hyderabad Transgender
By Sumathi Nov 30, 2022 07:10 AM GMT
Report

பொது மருத்துவமனையில் மருத்துவ அதிகாரியாக இரண்டு திருநங்கைகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

திருநங்கைகள்

ஹைதராபாத், கம்மத்தைச் சேர்ந்தவர் ரூத். இவர் மல்லா ரெட்டி மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் 2018 இல் பட்டம் பெற்றுள்ளார். ஆனால், அங்கு சுற்றியுள்ள 15 மருத்துவமனைகளால் நிராகரிக்கப்பட்டுள்ளார்.

அரசு மருத்துவமனை டாக்டர்களான 2 திருநங்கைகள் - தடைகளை தாண்டி சாதனை! | Two Trans Doctors Get Job In Telangana

மேலும், பிராச்சி ரத்தோர் அடிலாபாத்தில் உள்ள RIMS கல்லூரியில் MBBS பட்டம் பெற்றார். 30 வயதான மருத்துவர், தனியார் மருத்துவமனை ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். பின்னர் அவரது அடையாளம் தெரிந்த பிறகு மருத்துவமனையை விட்டு வெளியேறுமாறு கூறியுள்ளனர்.

அரசு பணி

இந்நிலையில், இருவரும் உஸ்மானியா பொது மருத்துவமனையில் மருத்துவ அதிகாரிகளாக பணியில் சேர்ந்துள்ளனர். திருநங்கைகள் அரசுப் பணியைப் பெறுவது எங்களுக்கு மட்டும் அல்ல நாடு முழுவதும் உள்ள திருநங்கைகளின் வெற்றியைக் குறிக்கும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.    

பல தசாப்தங்களாக திருநங்கை சமூகத்தைச் சேர்ந்தவர்கள் சந்தித்து வரும் பாகுபாடு மற்றும் சமூகப் புறக்கணிப்புக்கு இது முற்றுப்புள்ளி வைக்கும் என்று நம்புகின்றனர்.