நேருக்கு நேர் பயங்கரமாக மோதிய ரயில்கள் - பயணிகளின் நிலை என்ன?

Italy Train Crash Accident
By Sumathi Dec 12, 2023 07:39 AM GMT
Report

இரு ரயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 ரயில் விபத்து

வடக்கு இத்தாலி, பாயின்சா - ஃபோர்லின் நகரங்களுக்கு இடையே அதிவேக ரயிலும், பிராந்திய ரயிலும் நேருக்கு மோதிக்கொண்டன. இந்த விபத்தில் 17 பயணிகள் படுகாயமடைந்துள்ளதாக மீட்பு பணியில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

italy train accident

விரைவு ரயில் இன்ஜின் மோதியதில் பிராந்திய ரயிலின் இன்ஜின் கடுமையாக சேதமடைந்துள்ளது. தொடர்ந்து, அந்நாட்டு ரயில் சேவையை இயக்கும் ட்ரெனிட்டாலியா செய்தி தொடர்பாளர் கூறுகையில்,

காதல் நகரத்தை உலுக்கும் மூட்டைப்பூச்சி; அல்லோலப்படும் மக்கள் - என்ன காரணம்?

காதல் நகரத்தை உலுக்கும் மூட்டைப்பூச்சி; அல்லோலப்படும் மக்கள் - என்ன காரணம்?

17 பேர் படுகாயம்

"ரயில்கள் மிகவும் மெதுவாக வந்து மோதிக்கொண்டதால் மிகப்பெரிய சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. தற்போது 17 பயணிகளுக்கு சிறிய அளவிலான காயங்களே ஏற்பட்டுள்ளன. ரயில்கள் மோதிக்கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

இத்தாலி துணை பிரதமுரும், போக்குவரத்துத் துறை அமைச்சர் மெட்டோ சால்வினோ கூறுகையில், "ரயில் விபத்துக்கு பிறகு நிலைமையை கண்காணித்து வருகிறேன். விபத்துக்கான காரணம் குறித்து அறிக்கை கேட்கப்பட்டுள்ளது" எனக் கூறியுள்ளனர்.