மண் வீட்டிற்குள் முதல் தளம்.. ஏழை வீட்டில் எவ்வளவு சுகம் - வைரலாகும் Video!

Viral Video India Madhya Pradesh
By Jiyath Jul 02, 2024 08:04 AM GMT
Report

மாடிகளைக் கொண்ட ஒரு பாரம்பரியமான மண் வீட்டின் வீடியோ வைரலாகி வருகிறது.

பாரம்பரிய மண் வீடு

குமக்கட் லாலி என்ற பெண் தனது இன்ஸ்டாராகிராமில் 54.4K ஃபாலோவர்ஸ்களை கொண்டுள்ளார். இவர் பல்வேறு பகுதிகளுக்கு பயணித்து தனது அனுபவங்களை பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் மத்திய பிரதேசம் மாநிலம் கஜுராஹோ கிராமத்திற்கு குமக்கட் லாலி சென்றுள்ளார்.

மண் வீட்டிற்குள் முதல் தளம்.. ஏழை வீட்டில் எவ்வளவு சுகம் - வைரலாகும் Video! | Two Storey Mud House In Madhya Pradesh

அங்கு மாடிகளைக் கொண்ட ஒரு பாரம்பரியமான மண் வீட்டை கண்டு ஆச்சரியப்பட்டுள்ளார். அந்த வீட்டின் சிறிய வாசல் வழியாக குனிந்து சென்று, அங்கிருக்கும் விசாலமான அறைகளையும் மேல் தளத்திற்கு செல்லும் படிக்கட்டுகளையும் கண்டு திகைத்துப் போனார்.

18 ஆண்டுகளுக்கு பிறகு அண்ணன்-தங்கையை சேர்த்த ரீல்ஸ் - உதவிய உடைந்த பல்!

18 ஆண்டுகளுக்கு பிறகு அண்ணன்-தங்கையை சேர்த்த ரீல்ஸ் - உதவிய உடைந்த பல்!

வைரல் வீடியோ 

வெளியே 47 டிகிரி செல்சியஸ் வெப்பம் இருந்தபோதிலும், அந்த மண் வீட்டின் உட்புறம் 20 முதல் 25 டிகிரி வரை இருந்துள்ளது. இதுகுறித்து குமக்கட் லாலி கூறுகையில் "தனக்கு தாகம் ஏற்பட்டதால் அங்கு வசிப்பவர்களிடம் தண்ணீர் கேட்டேன்.

மண் வீட்டிற்குள் முதல் தளம்.. ஏழை வீட்டில் எவ்வளவு சுகம் - வைரலாகும் Video! | Two Storey Mud House In Madhya Pradesh

அப்போது ஒரு குடும்பம் தன்னை அன்பாக வரவேற்று தண்ணீர் கொடுத்தனர்" என்று தெரிவித்துள்ளார். இந்த வீடியோ வைரலாகி 5.3 மில்லியன் பார்வைகளை பெற்றுள்ளது. மேலும், இதை பார்த்த பலரும், கிராமப்புற கட்டிடக்கலையின் புத்தி கூர்மை மற்றும் எளிமை குறித்து பாராட்டி கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.