கன்னி வெடியில் சிக்கிய ராணுவ வீரர்கள் இரண்டு பேர் பலி
வெனிசுலா நாட்டில் கன்னி வெடியில் சிக்கிய ராணுவ வீர்கள் இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்அமெரிக்க நாடான வெனிசுலா மற்றும் அதன் அண்டை நாடான கொலம்பியா இடையே நீண்ட காலமாக மோதல் போக்கு நிலவி வருகிறது. கொலம்பியா ராணுவம் மேற்கு எல்லை வழியாக பயங்கரவாதிகளை தங்கள் நாட்டுக்குள் அனுப்புவதாக வெனிசுலா குற்றம் சாட்டி வருகிறது.
இந்த நிலையில் வெனிசுலாவின் மேற்கு மாகாணமான அபுரேவில் உள்ள தேசிய எல்லையில் நேற்று ராணுவ வீரர்கள் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது அந்த பகுதியில் பயங்கரவாதிகள் பூமிக்கு அடியில் புதைத்து வைத்திருந்த கண்ணி வெடி வெடித்துச் சிதறியது. இதில் 2 ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியாகினர்.
மேலும் 9 வீரர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள ராணுவ ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர்.