கல்யாணம் வேண்டாம் - 2 சகோதரிகள் செய்த பயங்கர செயல்!

Uttar Pradesh Marriage Crime Death
By Sumathi Sep 11, 2022 07:19 AM GMT
Report

திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்து இரண்டு சகோதரிகள் செய்த செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கட்டாய கல்யாணம் 

நொய்டாவில் வசித்து வருபவர் சுதா. இவரது கணவர் சுபாஷ் இறந்துவிட்டார். இவர்களது மகள்கள் நிக்கி மற்றும் பல்லவி. இருவருக்கும் விரைவில் திருமணம் செய்து வைக்க அவர்களது தாயார் விரும்பியுள்ளனர்.

கல்யாணம் வேண்டாம் - 2 சகோதரிகள் செய்த பயங்கர செயல்! | Two Sisters Who Jumped From The 11Th Floor Noida

இந்நிலையில், சகோதரிகள் இருவருக்கும் திருமணத்தில் விருப்பமில்லாமல் இருந்துள்ளது. அதனைத் தொடர்ந்து, செக்டார் 96 பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வந்த கட்டிடத்தின் 11-வது மாடிக்கு சென்று அதிகாலையில் சகோதரிகள் இருவரும் கீழே குதித்து உள்ளனர்.

தற்கொலை முயற்சி 

மகள்களை வீட்டில் காணவில்லை என்று தாய் தேடியுள்ளார். அப்போது, சகோதரிகள் இருவரும் காயங்களுடன் கீழே கிடந்துள்ளனர். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த தாய் அவர்களை டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையி அனுமதித்துள்ளார்.

கல்யாணம் வேண்டாம் - 2 சகோதரிகள் செய்த பயங்கர செயல்! | Two Sisters Who Jumped From The 11Th Floor Noida

இதில் மூத்த சகோதரி உயிரிழந்து விட்டார் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். படுகாயமடைந்த மற்றொரு சகோதரிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து நடத்திய விசாரணையில், வயது முதிர்வால் திருமணம் செய்து வைக்க சுதா முடிவு செய்துள்ளார்.

ஆனால், அது பிடிக்காமல் இருவரும் இந்த முடிவை எடுத்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில், பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.