Tuesday, Jul 22, 2025

கனமழையால் சுற்றுச் சுவர் இடிந்து விழுந்து இருவர் உயிரிழப்பு

Death
By Thahir 3 years ago
Report

ஒசூர் அருகே கனமழையால் சுற்றுச் சுவர் இடிந்து விழுந்ததில் பொம்பை விற்ற வடமாநில பெண் தொழிலாளி, 12வயது சிறுமி என 2 உயிரிழப்பு, மேலும் 2 பேர் காயம்.

சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து விபத்து 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த தேன்கனிக்கோட்டை அருகே உள்ள யாரப் தர்காவில் கடந்த 2 நாட்கள் உரூஸ் என்னும் திருவிழா நடைப்பெற்றது, வெகு விமர்சையாக நடைப்பெற்ற நிலையில், தர்கா எதிரில் பொம்மை கடை உள்ளிட்டவற்றை வியாபாரிகள் கடை அமைத்து வியாபாரம் செய்திருந்தனர்.

கனமழையால் சுற்றுச் சுவர் இடிந்து விழுந்து இருவர் உயிரிழப்பு | Two People Were Killed When The Wall Collapsed

தர்கா அருகே ராஜ்குமார் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் சுற்றுச் சுவர் தொடர் மழை காரணமாக இடிந்து விழுந்ததில் பொம்மை கடை வைத்திருந்த அசாம் மாநிலத்தை சேர்ந்த அபிதா பேகம்,  சஹானா, இஷாத் அலி,அமுல்யா ஆகிய 4 பேர் பலத்த காயமடைந்ததில் வடமாநில பெண் தொழிலாளி அபிதா பேகம், 12 வயது சிறுமி சஹானா ஆகியோர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர் காயமடைந்த 2 பேருக்கு தேன்கனிக்கோட்டை அரசுமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.