கள்ளக்காதலனுடன் தற்கொலை செய்துக் கொண்ட 2 குழந்தைகளின் தாய்

extramaritalaffair couplesuicide
By Petchi Avudaiappan Mar 15, 2022 11:41 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in தமிழ்நாடு
Report

சிவகாசி அருகே திருமணத்தை மீறிய உறவால் 2 பேர் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சிவகாசி அருகே எம்.துரைச்சாமிபுரம் பாரப்பட்டியில் மணிகண்டன் - ராமலட்சுமி இரண்டு பிள்ளைகளுடன் வசித்து வந்தனர்.  இதனிடையே சிவகாசி அருகே மேலப்பாளையாபுரத்தைச் சேர்ந்த தங்கவேல் என்பவரின் மகன் பன்னீர் செல்வத்துக்கும், ராமலட்சுமிக்கும் கடந்த சில ஆண்டுளுக்கும் மேலாக திருமணத்தை மீறிய உறவு இருந்து வந்துள்ளது.

இருவரும் அடிக்கடி சந்தித்து பேசி வந்ததால் இரண்டு குடுபத்திற்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் மேலப்பாளையாபுரம் கிராமத்தில் உள்ள காட்டுப் பகுதியில் ராமலட்சுமியும் பன்னீர் செல்வமும்  மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டனர். 

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாரனேரி போலீசார் இரண்டு உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.