பழம் கொடுத்த போது நேர்ந்த சோகம் - திருச்செந்தூர் கோவில் யானை மிதித்து இருவர் உயிரிழப்பு
பாகன் உட்பட இருவரை திருச்செந்தூர் கோவில் யானை கொன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்செந்தூர் முருகன் கோவில்
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் உள்ள முருகன் கோவில் முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றாகும். இந்த கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள்.
இந்த கோவிலில் 2006 ஆம் ஆண்டு முதல் தெய்வானை என்ற யானை வளர்க்கப்பட்டு வருகிறது. இந்த யானைக்கு 26 வயது ஆகும்.
இருவர் உயிரிழப்பு
இந்நிலையில் இன்று மாலை யானையின் பாகன் உதயகுமார் மற்றும் அவரது உறவினர் சிசுபாலன் யானைக்கு பழம் கொடுத்தபோது திடீரென யானை அவர்களை மிதித்துள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே சிசுபாலன் உயிரிழந்துள்ளார்.
பாகன் உதயகுமார் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் பொது செல்லும் வழியிலே உயிரிழந்துள்ளார். யானை மிதித்து இருவர் உயிரிழந்த சம்பவம் திருச்செந்தூர் கோவிலில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.