சென்னை உயர் நீதிமன்றத்திற்கு 2 புதிய நீதிபதிகளை நியமித்து ஜனாதிபதி உத்தரவு

madrashighcourt newjusticeappointed presidentorder
By Swetha Subash Mar 24, 2022 02:40 PM GMT
Report

சென்னை உயர் நீதிமன்றத்திற்கு 2 புதிய நீதிபதிகளை நியமித்து ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சென்னை உயர் நீதிமன்றத்திற்கு கூடுதல் நீதிபதிகளாக வழக்கறிஞர்கள் நிதுமோலு மாலா, எஸ்.சவுந்தர் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

“நிதுமோலு மாலா மற்றும் எஸ்.சவுந்தர் ஆகியோரை சென்னையின் கூடுதல் நீதிபதிகளாக நியமித்து ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அவர்கள் இருவரும் பொறுப்பேற்ற நாளில் இருந்து இரண்டு வருட காலத்திற்கு கூடுதல் நீதிபதிகளாக பதவி வகிப்பார்கள்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளில் 13 பெண் நீதிபதிகள் உள்பட மொத்தம் 61 ஆக எண்ணிக்கை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.