அரக்கோணம் அருகே இருவர் படுகொலை சம்பவம்- குற்றவாளிகளை கைது செய்ய கோரி வி.சி.கவினர் ஆர்ப்பாட்டம்
அரக்கோணம் சோகனூரில் தலித் இளைஞர்கள் 2 பேர் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில், குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய கோரி, ஒருங்கிணைந்த மாவட்டம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பாக மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் முதன்மைச் செயலாளர் பாவரசு, மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் கனியமுதன், மாவட்ட செயலாளர்கள் இன்குலாப், கதிரவன், செல்வரசு, வழக்கறிஞர்கள் சரவணன், ரவிக்குமார் உள்ளிட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியியினர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

அரக்கோணம் சோகனூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த சூர்யா. அர்ஜுன் ஆகிய இரண்டு பேர்கள், பானை சின்னத்திற்கு வாக்கு கேட்டதற்காக பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்த சாதிவெறிக் கும்பல்களால் படுகொலை செய்யப்பட்டனர்.
கொலை குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யக்கோரியும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ஒரு கோடி ரூபாய் மற்றும் குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றும், சாதி வெறியை தூண்டி விடும் ராமதாஸ், அன்புமணி நடத்தி வரும் பாமக கட்சியை தடை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்