மும்பையில் தென் கொரிய பெண்ணின் கையை பிடித்து இழுத்து முத்தமிட முயன்ற இருவர் கைது

Sexual harassment Mumbai
By Thahir Dec 01, 2022 06:26 AM GMT
Report

தென் கொரியாவைச் சேர்ந்த ம்யோச்சி என்ற பெண் யூடியூபரின் கையை பிடித்து இழுத்து கன்னத்தில் முத்தமிட முயன்ற இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

பெண்ணிடம் அத்துமீறிய வாலிபர்கள் 

தென் கொரியாவைச் சேர்ந்த பெண் இரவு நேரத்தில் தனது யூடியூப் பக்கத்தில் நேரலை செய்து கொண்டே நடந்து சென்றுள்ளார்.

அப்போது இருசக்கர வாகனத்தில் இருந்த 2 வாலிபர்கள் அவரை பார்த்ததும் அருகில் சென்று கையை பிடித்து இழுத்துச் சென்று பைக்கில் செல்லலாம் என கூறியுள்ளனர்.

எங்கே அழைத்துச் செல்கிறாய் என அந்த பெண் கேள்வி எழுப்பவே. நாம் பைக்கிள் செல்லாம் என கூறியுள்ளனர். இதை அவர் மறுத்துள்ளார்.

two-men-arrested-grabbing-south-korean-woman

பின்னர் ஒரு இளைஞர் அவரின் கழுத்தில் கையை போட்டுக் கொண்டு கன்னத்தில் முத்தம் கொடுக்கச் சென்ற போது பெண் விலகி சென்றார்.

கைது செய்த போலீசார் 

இதையடுத்து அந்த பெண் அங்கிருந்து சென்ற போது, விடாமல் பின் தொடர்ந்து வந்த இரு இளைஞர்கள் வா..பைக்கிள் அழைத்துச் சென்று விடுகிறோம் என கூறினார் ஆனார் அவர் அதை மறுத்துள்ளார்.

இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலானதை தொடர்ந்து பெண்ணிடம் அத்துமீறிய இரண்டு வாலிபர்களை போலீசார் கைது செய்து பாலியல் வன்கொடுமை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.