2வது முறையாக வரலாற்றில் இடம் பிடித்த இந்திய கிரிக்கெட் அணி - என்ன சாதனை தெரியுமா?
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான டி20 போட்டி மூலம் இந்திய அணி சத்தமே இல்லாமல் சாதனை ஒன்றை படைத்துள்ளது.
இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் கொல்கத்தாவில் நடைபெற்ற முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தொடர்ந்து 2வது டி20 போட்டி இன்று அதே மைதானத்தில் நடைபெறுகிறது.
இதனிடையே முதல் டி20 போட்டியில் நடைபெற்ற ஒரு அதிசய சம்பவம் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. அதாவது இந்திய அணி எப்போதுமே அணியில் 3 வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் ஒரு லெக் ஸ்பின்னர் , ஒரு ஆப் ஸ்பின்னர் என போட்டியில் விளையாடும்.
ஆனால் முதல் போட்டியில் களமிறங்கிய யுஸ்வேந்திர சாஹல் மற்றும் ரவி பிஷ்னோய் ஆகிய இருவருமே (ரிஸ்ட்) லெக் ஸ்பின்னர்கள். இப்படி ஒரே வகையான லெக் ஸ்பின்னர்கள் இந்திய அணிக்காக ஒரு போட்டியில் இணைந்து விளையாடுவது இதுவே வரலாற்றில் இரண்டாவது முறையாகும். இதற்கு முன்னால் 2019ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் சாஹல் மற்றும் மயங்க் மார்கண்டே ஆகிய இரண்டு ஸ்பின்னர்கள் ஒன்றாக விளையாடினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.