விஷவாயு தாக்கி இருவர் பலி: இந்தியாவில் தொடரும் அவல மலக்குழி மரணங்கள்
இந்தியாவில் மனித கழிவுகளை மனிதர்களே அகற்றுவது சட்டப்படி ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் மலக்குழி மரணங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதற்கு மாற்றான வழிமுறைகளை கண்டுபிடிக்க வேண்டும் என உச்சநீதிமன்றமும் தெரிவித்துள்ளது. மனித கழிவுகளை மனிதர்களே அல்லுவது தொடரக்கூடாது எனப் பல முறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் டெல்லியில் சமீபத்தில் சவக்குழிக்குள் இறங்கி சுத்தம் செய்த இருவர் விஷவாயு தாக்கி உயிரழந்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியைச் சேர்ந்த லோகேஷ் மற்றும் பிரேம் சந்த் என்கிற இருவர் காசியாபூரில் வியாழன் இரவு அன்று மலக்குழியை சுத்தம் செய்ய இறங்கியுள்ளனர்.
ஆனால் விஷவாயு தாக்கி சம்பவ இடத்திலேயே அவர்கள் உயிரழ்ந்துள்ளது தெரியவந்துள்ளது. உரிய பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் அவர்களிடம் வேலை வாங்கப்பட்டிருப்பதாக போலீஸ் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த வேலைக்காக அவர்களுக்கு ரூ.3,000 சம்பளமாக பேசப்பட்டதாக போலீஸ் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.