2வது டெஸ்ட் போட்டியில் இவர்களுக்கு இடமில்லை - இந்திய அணிக்கு அதிர்ச்சி
ி இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டியில் இரண்டு வீரர்கள் இடம்பெற மாட்டார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் நாட்டிங்காமில் நடந்த முதல் டெஸ்ட் போட்டி மழையால் டிரா ஆனதாக அறிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நாளை 2வது டெஸ்ட் போட்டி புகழ் பெற்ற லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் காயம் காரணமாக அணியில் இருந்து விலகிய சுப்மன் கில், வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஆவேஷ் கான் ஆகியோருக்கு பதிலாக சேர்க்கப்பட்ட சூர்யகுமார் யாதவ் மற்றும் பிரித்வி ஷா இருவரும் விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் இலங்கை தொடரை முடித்து விட்டு இங்கிலாந்து சென்ற இருவரும் 10 நாள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இது ஆகஸ்ட் 13 ஆம் தேதி தான் நிறைவடைகிறது. அதன்பின் பயிற்சியில் ஈடுபட்டு 3வது டெஸ்ட் போட்டியில் இணைவார்கள் என கூறப்படுகிறது.
ஏற்கனவே அணியில் சில வீரர்கள் சொதப்பி வரும் நிலையில் 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி எப்படி விளையாட போகிறது என்ற எதிர்பார்ப்பு அனைவரிடத்திலும் ஏற்பட்டுள்ளது.