கடவுள் சார்... நீங்க... பனிக்கட்டியால் முகம் முழுவதும் உறைந்து போன மானை காப்பாற்றிய நபர்கள்...!

Viral Video
By Nandhini Dec 30, 2022 11:47 AM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

முகம் முழுவதும் பனிக்கட்டியால் உறைந்து போன மானை 2 பேர் காப்பாற்றிய வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

உறைந்து போன மானை காப்பாற்றிய நபர்கள்

அமெரிக்காவில் வீசும் கடுமையான குளிர்கால புயலால் வாய், கண்கள் மற்றும் காதுகள் முற்றிலும் பனிக்கட்டியால் உறைந்து போன மானை 2 மலையேறுபவர்கள் காப்பாற்றும் வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், 2 மலையேறுபவர்கள் முகம் முழுவதுமாக பனிக்கட்டியால் உறைந்து போன ஒரு மானைப் பார்த்தனர். மான் அதன் முகம் பனியில் உறைந்தபோது அதன் தலையுடன் பனிக்கு அடியில் பசியோடு உணவை தேடிக் கொண்டிருந்தது.

மலையேறுபவர்கள் மான் அருகே செல்ல முயன்றபோது, ​​அது பயந்து பீதியில் ஓடியது. இருப்பினும், சிறிது நேரத்திற்குப் பிறகு, 2 மனிதர்கள் மானை பிடித்து அதன் முகத்தில் இருந்து பனிக்கட்டியை அகற்றினர். நிம்மதியடைந்த மான் பின்னர் அங்கிருந்து துள்ளி குதித்து ஓடியது.

தற்போது இது தொடர்பான வீடியோக்களும், புகைப்படங்களும் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் இவர்களின் மனிதநேயத்தை பாராட்டி கமெண்ட் செய்து வருகின்றனர். 

two-hikers-helping-deer-frozen-cold-weather