பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டவருக்கு இரு விரல் சோதனை நடத்த கூடாது : நீதிமன்றம் அதிரடி
பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்களின் மீது நடத்தப்படும் இரு விரல் சோதனைக்கு உச்ச நீதி மன்றம் தடைவிதித்துள்ளது. பாலியல் வன் கொடுமைக்கு ஆளான பெண்களுக்கு நடத்தப்படும் இரு விரல் சோதனைக்கு உச்ச நீதி மன்றம் தடைவிதித்துள்ளது.
இரு விரல் சோதனை
இது தொடர்பான வழக்கானது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சந்திரசூட் மற்றும் ஹிமா கோலி முன்பு விசாரணைக்கு வந்தது. அபோது இது தொடர்பான வழக்கினை விசாரித்த நீதிபதிகள் பாலியல் தொல்லைக்கு உள்ளான பெண்ணின் மீது இரு விரல் சோதனை நடத்துவது மிகவும் துரதிஷ்டவசமானது என கூறினார்.

மேலும் இந்த சோதனை இந்த சோதனை ஆணாதிக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் இருப்பதாகவும் இதில் எந்த அறிவியல் ரீதியாக எந்த பலனும் இருப்பதில்லை என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது
உச்சநீதிமன்றம் உத்தரவு
மேலும் இந்த உத்தரவு சரியான முறையில் பின்பற்றப்படுகிறதா என்பதை அந்தந்த மாநிலத்தைச் சேர்ந்த காவல்துறையினர் மற்றும் சுகாதாரத் துறையினர் உறுதி செய்ய வேண்டும் என்றும் உத்தரவை பிறப்பித்தனர்
மேலும் இந்த உத்தரவானது மருத்துவத்துறை படிக்கின்ற அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள பாடத்திட்டத்திலிருந்து இருவிரல் பரிசோதனையை நீக்க வேண்டும் எனவும் மத்திய மற்றும் மாநில சுகாதாரத் துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது