“இந்த ரணகளத்திலும் கிளுகிளுப்பு கேட்குது போல” - மழை வெள்ளத்தில் ஜாலியாக மதுகுடித்த நபர்கள்
chennairains
chennaiflood
By Petchi Avudaiappan
சென்னை வெள்ளத்தில் இரண்டு மது பிரியர்கள் மது குடிக்கும் வீடியோ வைரலாகியுள்ளது.
சென்னையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால் நகரின் பல இடங்களில் வெள்ள நீர் சூழந்துள்ளது. இதனால் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்து மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டு வருகின்றனர்.
வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் மக்களை மீட்பு குழுவினர் மீட்டு வரும் நிலையில் தமிழக அரசும் துரித கதியில் நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளது. இதனிடையே சென்னையில் வெள்ள நீர் சூழ்ந்திருக்கும் இடத்தில் இரண்டு மதுப்பிரியர்கள் மழை வெள்ள நீருக்கு நடுவே நின்று ஜாலியாக மதுவை ஊற்றி குடித்துக்கொண்டிருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.