பணப்பட்டுவாடா செய்த திமுக பிரமுகர்கள் 2 பேர் கைது
பணப்பட்டுவாடா செய்து வந்த திமுக பிரமுகர்கள் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தமிழக சட்டமன்ற தேர்தல் நாளை தமிழகம் எங்கும் நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பணிகள் அனைத்தும் நிறைவு பெற்றுள்ளன. மேலும் தேர்தலில் பணப்பட்டுவாடா மற்றும் பரிசு பொருட்கள் பரிமாற்றம் போன்ற செயல்களை தடுக்க தேர்தல் பறக்கும் படையினர் அமைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் முதுகுளத்துார் பேரூராட்சி பகுதியில் பறக்கும்படை அலுவலர் குமார் தலைமையில் போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது தி.மு.க., நிர்வாகி செல்லமணியிடம் ரூ.46,500ம், முரளியிடம் அதற்கான வரவு செலவு நோட்டுகளை பறிமுதல் செய்து முதுகுளத்துார் தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
முதுகுளத்துார் போலீசில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் குமார் புகார் செய்தார்.எஸ்.ஐ. சக்திவேல், செல்லமணி 62, முரளி 20, 2 பேரையும் கைதுசெய்தனர்.