மீன் குழம்பு சாப்பிட்ட மாமியார்- மருமகன் உயிரிழப்பு
கேரளாவில் ஹொட்டலில் மீன் குழம்பு சாப்பிட்ட மாமியார்- மருமகன் உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது.
கேரளாவின் கொல்லம் Nilamel பகுதியை சேர்ந்தவர் ஷாஜி(வயது 42), நேற்று முன்தினம் இரவு இவரது மனைவி சஜினா, மாமியார் ரஷீதா பீவி(வயது 58), தனது 2 குழந்தைகளுடன் காரில் விழிஞ்ஞத்தில் உள்ள ஹொட்டல் ஒன்றுக்கு சாப்பிட சென்றுள்ளனர்.
கார் டிரைவர் உட்பட 6 பேரும் மீன் குழம்பு சாப்பாடு சாப்பிட்டுள்ளனர். வரும் வழியில் ஷாஜி, அவரது மனைவி மற்றும் மாமியாருக்கு மயக்கம் ஏற்பட்டதுடன் வாந்தி எடுத்துள்ளனர்.
தொடர்ந்து பாரிப்பள்ளியில் உள்ள அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர், அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் ஷாஜி மற்றும் அவரது மாமியார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
சஜினா மேல்சிகிச்சைக்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கெட்டுப்போன மீன்குழம்பை சாப்பிட்டதால் இவ்வாறு நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது, தொடர்ந்து உணவு பாதுகாப்பு துறையினர் மற்றும் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
அதிகரிக்கும் பதற்றம் : ஈரானை நெருங்கியது அமெரிக்காவின் ஆபிரகாம் லிங்கன் விமானம் தாங்கி கப்பல் IBC Tamil
கிவுல் ஓயா திட்டமும் இன அழிப்பு நடவடிக்கை...இதனை நிறுத்துவது தமிழ் மக்களின் கூட்டுப் பொறுப்பாகும்..! IBC Tamil
யாழில் ஆலயம் செல்ல தனியாரின் காணிக்குள் பாதை அமைக்கும் இராணுவம் : காணி உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு IBC Tamil