கள்ளக்குறிச்சி கலவரத்தில் இரண்டு மாடுகள் திருட்டு..!
கள்ளக்குறிச்சியில் நேற்று நடந்த போராட்டத்தின் போது இரண்டு மாடுகள் திருடு போனதாக தகவல் வெளியாகியுள்ளது.
கள்ளக்குறிச்சி கலவரம்
கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் பள்ளியில் விடுதியில் தங்கி கல்வி பயின்று வந்த பிளஸ் 2 மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த விவகாரத்திற்கு நீதி கேட்டு நேற்று நடந்த போராடட்டம் கலவரமாக மாறியது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கற்களை வீசி தாக்கியதில் விழுப்புரம் சரக டிஐஜி பாண்டியன்,மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் உள்பட 58 போலீசார் காயமடைந்தனர்.

பள்ளிக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் அங்கிருந்த பொருட்களை சூறையாடினார்கள். பள்ளியின் நுழைவு வாயில் கேட்டை உடைத்த அவர்கள் அங்கிருந்த நாற்காலிகளை தூக்கி வந்து சாலையில் போட்டு தீவைத்து எரித்தனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து பள்ளி தலைமையாசிரியர்,செயலாளர் மற்றும் தாளாளர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது வேதியியல் மற்றும் கணித ஆசிரியர்கள் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாடுகள் திருட்டு
இந்த நிலையில் நேற்று கலவரம் நடந்த போது அந்த பகுதியில் கட்டப்பட்டிருந்த இரண்டு மாடுகள் திருட்டு போயிள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கலவரகாரர்கள் மாட்டின் உரிமையாளர் முன்பே மாட்டை திருடி சென்றதாக கூறப்படுகிறது.
திருடிச் சென்றவர்கள் மற்றும் கலவரத்தில் ஈடுபட்டவர்கள் வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது.