வானிலையை அளவிட' சிறிய ஹெலிகாப்டர்கள் அனுபப்பப்பட்டதா? - ஹெலிகாப்டர் விபத்து குறித்து எழும் சர்ச்சை

By Irumporai Dec 10, 2021 06:01 AM GMT
Report

 குன்னுார், வெலிங்கடனில் ராணுவ உயரதிகாரிகளுக்கான பயிற்சிக் கல்லுாரி உள்ளது. இங்கு இன்று , நடக்க இருந்த ராணுவ உயரதிகாரிகளுக்கான கூட்டத்தில் பங்கேற்பதற்காக இந்திய முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் நான்கு பைலட்கள் உள்பட 14 பேர், கோவை மாவட்டம், சூலுாரிலுள்ள ராணுவ விமானப்படைத் தளத்திலிருந்து, 11.30 மணியளவில் ஹெலிகாப்டரில் வெலிங்டன் நோக்கி கிளம்பினர்.

ஹெலிகாப்டர் குன்னுார் மலைப்பாதையிலுள்ள காட்டேரி பள்ளத்தாக்குக்கு மேலே பறந்த போது கடும் மேகமூட்டமான சூழ்நிலை நிலவியது. இதனால், ஏற்பட்ட காலநிலை குழப்பம் காரணமாக, ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதி விழுந்து விபத்துக்குள்ளானது.

ஹெலிகாப்டர் விபத்தில், அதில் பயணித்த 4 ராணுவ வீரர்கள் பலியானதாக முதல் கட்ட தகவல் வெளியானது. இதுவரை 13 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. ஒருவர் உயிருக்கு போராடிய நிலையில் மீட்கப்பட்டு குன்னுார் ராணுவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார்

 பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகா ராவத் உயிரிழந்ததாக விமானப்படை அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியிட்டு உள்ளது.

இந்த நிலையில் , இந்த ஹெலிக்காப்டர் விபத்து குறித்து திடுக்கிடும் சில யூகங்கள் எழுப்புகின்றனர் , ராணுவத்துறையினர்  அதாவது வழக்கமாக குடியரசுத் தலைவர் அல்லது பிரதமர் வருகையின் போது, ​​பிரதான ஹெலிகாப்டருடன் நான்கு ஹெலிகாப்டர்கள் பறக்கும்.

ஆனால் வெலிங்டனுக்கு Mi-17 V 5 புறப்படுவதற்கு முன்பு ஏதேனும் ஹெலிகாப்டர்கள் இயக்கப்பட்டதா என்பதை IAF அதிகாரிகளுடன் அவரால் உறுதிப்படுத்த முடியவில்லை.

"Mi-17 V 5 மிகவும் அனுபவம் வாய்ந்த விமானி மூலம் இயக்கப்பட்டது. ஹெலிகாப்டர் தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்டது, மேலும் மனித தவறுகள்தான் விபத்துக்கு வழிவகுத்தது, மேகம்மூடுபனி இயல்பை விட அதிகமாக இருந்திருக்கலாம். சூழ்நிலையில், விமானி ஒரு நொடியில் ஒரு முடிவை எடுக்க வேண்டும். அந்த முடிவு தவறாகப் போயிருக்கலாம் என கூறுகின்றனர்.