நடிகர் ஆர்யாவாக நடித்த நபர்கள் - ரூ.70 லட்சம் மோசடி புகாரில் திடீர் திருப்பம்

Actor Arya cheating case aryacheating case
By Petchi Avudaiappan Aug 24, 2021 05:42 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in குற்றம்
Report

நடிகர் ஆர்யா போல் நடித்து ஜெர்மனி வாழ் இலங்கை தமிழ் பெண்ணிடம் மோசடி செய்த இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக உள்ள ஆர்யா நடிப்பில் சமீபத்தில் ஓடிடியில் வெளியான சார்பட்டா பரம்பரை படம் மிகப்பெரிய வெற்றி பெற்றிருந்தது. இந்த சந்தோஷம் ஒருபுறம் இருக்க, அவருக்கு மிகப்பெரிய தலைவலியாக ஒரு சம்பவம் நிகழ்ந்தது.

நடிகர் ஆர்யாவாக நடித்த நபர்கள் - ரூ.70 லட்சம் மோசடி புகாரில் திடீர் திருப்பம் | Two Arrested For Impersonating Actor Arya

ஜெர்மனி வாழ் இலங்கையை சேர்ந்த தமிழ் பெண்ணான வித்ஜா நடிகர் ஆர்யா தன்னை காதலித்து ஏமாற்றிவிட்டதாகவும், தன்னிடம் ரூ.70 லட்சம் வரை பண மோசடி செய்துவிட்டதாகவும் பிரதமர் மற்றும் குடியரசுத் தலைவர் அலுவலகங்களுக்கு ஆன்லைன் மூலம் அளித்தார். இதுதொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டு, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது.

இதனிடையே சென்னை குற்றப்பிரிவு போலீசார் நடிகர் ஆர்யாவிடம் இது தொடர்பாக விசாரணை நடத்தினார்கள். அப்போது தனக்கு அந்த பெண் யாரென்றே தெரியாது என்றும், குற்றவாளிகளை போலீசார் கண்டுபிடிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்த வழக்கில் புதிய திருப்பமாக நடிகர் ஆர்யா போல நடித்து ஜெர்மனி வாழ் இலங்கை தமிழ் பெண்ணை ஏமாற்றிய இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த முகமது அர்மான் நடிகர் ஆர்யாவாக தன்னை இணையத்தில் அறிமுகப்படுத்தி அந்த பெண்ணிடம் பேசி வந்ததும், அவரிடம் பணம் பறித்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. அவருக்கு உடந்தையாக இருந்த ஹூசைனி பையாக் என்ற நபரும் பிடிபட்டுள்ளார். இவர்களிடம் இருந்து 2 மொபைல், போன்கள் 1. லேப்டாப், 1 ஐபேட் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதனிடையே உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடித்த போலீசாருக்கு நடிகர் ஆர்யா நன்றி தெரிவித்துள்ளார். ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், உண்மையான குற்றவாளியை கைது செய்த சைபர் கிரைம் போலீசாருக்கு நன்றி. இது நான் வெளிப்படுத்தாத ஒரு உண்மையான மன அதிர்ச்சி எனக் குறிப்பிட்டுள்ளார்.