சத்தமில்லாமல் எலான் மஸ்க் செய்த வேலை : வைரலாகும் ட்விட்டர் பதிவு
உலகிலேயே மிகப்பெரிய பணக்காரராக இருக்கும் எலான் மஸ்க் ஜெர்மனியில் டெஸ்லா தொழிற்சாலையைத் திறந்த நிலையில், அமெரிக்காவில் டெக்சாஸ் பகுதியில் கட்டப்பட்டு வரும் புதிய டெஸ்லா தொழிற்சாலையை ஏப்ரல் மாதம் 7ஆம் தேதி திறக்க திட்டத்தில் பரபரப்பாக உள்ளார்.
இந்த நிலையில்எலான் மஸ்க் சத்தமில்லாமல் டிவிட்டர் நிறுவனத்தில் 9.2 சதவீத பங்குகளை வாங்கியுள்ளார்.டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவரான எலான் மஸ்க் தனது சொந்த பணத்தில் ட்விட்டர் பங்குகளை வாங்கியிருப்பதாக அமெரிக்கப் பங்குச்சந்தைக்குச் சமர்ப்பித்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்

இந்த நிலையில் எலன் மஸ்க் ட்விட்டரில் EditButton வேண்டுமா வேண்டாமா என்பது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் அந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.