இன்னொருவர் மனைவிக்கு ஹாய் மெசேஜ்: தானே சென்று காவல்துறையில் சிக்கிய நபர்

Twitter Viral Photos
By Irumporai Jul 20, 2022 11:35 PM GMT
Report

தன்னை ஒருவர் மிரட்டுவதாக காவல்துறையிடன் ட்விட்டரில் புகார் கூற அதற்கு காவல்துறை பதில் கூறிய விதம் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது.

காவல்துறைக்கு கோரிக்கை

சமூக வலைத்தளமான ட்விட்டரில் பல்வேறு நிகழ்வுகள் வைரலாகும் அந்த வகையில் ஒரு நபர் தான் ஒரு பெண்ணுக்கு ஐலைக் யூ மெசேஜ் அனுப்பியதால் தாக்கப்பட்டதாக பஞ்சாப் காவல்துறையிடம் புகார் கூற அதற்கு பஞ்சாப் காவல்துறை அளித்த பதில்தான் இணையத்தில் வைரல் என்றே கூறலாம்.

அமிர்தசரஸ் பகுதியை சேர்ந்த சுஷாந்த் தத் என்ற ட்விட்டர் வாசி தனது பதிவில் சார் நான் ஒருவருக்கு (பெண்ணுக்கு )"ஐ லைக் யூ" செய்தியை அனுப்பினேன், அதற்காக அந்த பெண்ணின் கணவர் நேற்று இரவு வந்து என்னை மோசமாக அடித்தார்.

வச்சி செய்யும் இணையவாசிகள்

நான் செய்த செயலுக்கு மீண்டும் மீண்டும் மன்னிப்பு கேட்கிறேன். ஆனால் இப்போது நான் கவலைப்படுகிறேன் அவரால் எனக்கு எதுவும் ஆபத்து வருமோ என அஞ்சுகிறேன். ஆகவே எனக்கு தேவையான பாதுகாப்பு கொடுங்கள் என் உயிரைப் பாதுகாத்திடுங்கள் என பதிவிட்டு பஞ்சாப் காவல்துறை ட்விட்டர் பக்கத்தை டேக் செய்துள்ளார்.

இதற்கு நகைச்சுவையாக பதில் கூறிய பஞ்சாப் காவல்துறை ஒரு பெண்ணுக்கு நீங்கள் சம்மந்தமே இல்லாமல் குறுஞ்செய்தி அனுப்பி என்ன எதிர்பார்க்கிறீர்கள் என்று தெரியவில்லை.

பதிலடி கொடுத்த காவல்துறை

அதே சமயம் அந்த பெண்னின் கணவரும் உங்களை அடித்திருக்க கூடாது , அவர் உங்களின் இந்த நடத்தை குறித்து எங்களிடம் புகார் அளித்திருக்க வேண்டும் , அப்போது நாங்கள் சரியான பிரிவுகளின் கீழ் உங்கள் மீது வழக்கு பதிவு செய்து உங்களுக்கு சரியான சேவையினை செய்திருப்போம்.

இன்னொருவர்  மனைவிக்கு ஹாய் மெசேஜ்: தானே சென்று காவல்துறையில் சிக்கிய நபர் | Twitter User Said Beaten Response From Police

ஆனாலும் கவலை வேண்டாம் இந்த இரண்டு குற்றங்களும் சட்டப்படி முறையாக கவனிக்கப்படும் என பதில் அளித்துள்ளது பஞ்சாப் காவல்துறை.

தற்போது காவல்துறையிடம் கோரிக்கை வைத்த நபர் அடியும் வாங்கி காவல்துறையின் தண்டனையும் பெறப் போகின்றார் என இணைய வாசிகள் கிண்டல் செய்து வருகின்றனர்.