ஆனா ஆவன்னா ..வாத்தி ரைடுனா.. : ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகும் MrPerfectThalapathyVIJAY!

Master vijay Beast mrperfect thalapathy vijay
By Irumporai Jul 27, 2021 11:11 AM GMT
Report

ரோல்ஸ் ராய்ஸ் கார் வரிவிதிப்பு விவகாரத்தில், நடிகர் விஜய்க்கு கீழமை நீதிமன்றம் விதித்த அபராதத்திற்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் நடிகர் விஜய்யை ஏதோ தேச விரோதி போல் சித்தரித்து நீதிபதி விமர்சித்திருந்தது நியாயமற்றது என கூறியுள்ள சென்னை உயர்நீதி மன்றம் காருக்குச் செலுத்த வேண்டிய நுழைவு வரியை ஒரு வாரத்திற்குள் செலுத்தவும் உத்தரவிட்டுள்ளது .

இந்த நிலையில் நடிகர் விஜய்க்கு வழங்கப்பட்ட தீர்ப்பினை கொண்டாடும் வகையில் விஜய் ரசிகர்கள் MrPerfectThalapathyVIJAY என்ற ஹேஷ்டாகினை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

தற்போது இந்த ஹேஷ்டாக் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகி வருகின்றது.