"கோ பேக் ஸ்டாலின்"..."வெல்கம் ஸ்டாலின்"... ட்விட்டரில் ட்ரெண்டாகும் ஹேஸ்டேக்குகள்...

Twitter trending Mk stalin
By Petchi Avudaiappan May 30, 2021 08:55 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in தமிழ்நாடு
Report

கொங்கு மண்டலத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வரும் நிலையில் ட்விட்டரில் பல ஹேஸ்டேக்குகள் ட்ரெண்டாகியுள்ளன.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனிடையே தினசரி பாதிப்பில் சென்னையை பின்னுக்குத் தள்ளி கோவை மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. கோவைக்கு அடுத்தபடியாக திருப்பூர், ஈரோடு, சேலம், மதுரை, திருச்சி ஆகிய மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது.

இதனால்முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் இன்று பயணம் மேற்கொண்டு கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்து வருகிறார்.

இந்த நிலையில் ட்விட்டரில் இந்திய அளவில் #GoBackStalin என்ற ஹேஸ்டேக் முதலிடம் பிடித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் #Welcome_TNCM_Stalin, #TNsavior_MKStalin என்ற ஹேஸ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.