கடவுள் சிவனின் கோபம்தான் உத்தரகாண்ட் வெள்ள பாதிப்பு – சுப்பிரமணிய சுவாமி டுவீட்

twitter-subramaniyaswamy
By Nandhini Oct 20, 2021 02:48 AM GMT
Report

கடவுள் சிவனின் கோபம் தான் உத்தரகாண்ட் வெள்ளப் பாதிப்பு என்று சுப்பிரமணிய சுவாமி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். பருவமழை தொடங்கியுள்ளதால், உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது.

இதனால் அம்மாநிலத்தில் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்ததால் அங்குள்ள மக்களின் இயல்புநிலை முற்றிலும் பாதிக்கப்பட்டிருக்கிறது.

அங்கு 10 தேசிய பேரிடர் மீட்புக் குழுக்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதுவரை உத்தரகாண்டில் பெய்த மழையால் பலியானோர் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது.

இது குறித்து சுப்பிரமணிய சுவாமி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், உத்தராகண்ட் வெள்ளப் பாதிப்புக்கு காரணம் கடவுள் சிவனின் கோபம் என்று பதிவிட்டுள்ளார்.