டுவிட்டரில் பாடலை வெளியிட்ட கமல்- இன்று முதல் சூறாவளி பிரச்சாரம்!

MNM people dmk vote
By Jon Mar 03, 2021 04:35 PM GMT
Report

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அவர்கள் ஏற்கனவே தேர்தல் பிரச்சாரம் செய்து வந்த நிலையில், அண்மையில் அவர் காலில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அதன் பின் ஓய்வு எடுத்துக் கொண்ட கமல்ஹாசன் இன்று முதல் மீண்டும் தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக இறங்கி உள்ளார்.

இன்று மாலை 3 மணிக்கு ஆலந்தூரில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கும் கமல்ஹாசன் இரவு 8 மணிக்கு மைலாப்பூரில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேச இருக்கிறார்.

இந்த பொதுக்கூட்டம் குறித்த இந்த கமல்ஹாசனின் இந்த தேர்தல் பிரச்சாரம் குறித்த அறிவிப்பு அட்டவணை வெளியாகி இருக்கிறது. இந்நிலையில் இன்று மீண்டும் தேர்தல் பிரச்சாரம் தொடங்கவிருக்கும் நிலையில் கமல்ஹாசன் தனது டுவிட்டரில், ‘மாற்றத்திற்குத் தயாராகி விட்டார்கள் தமிழக மக்கள் என்று குறிப்பிட்டு ஒரு பாடலையும் பதிவு செய்திருக்கிறார்.