ஜகமே தந்திரம் படத்திற்கு சிறப்பு எமோஜியை வெளியிட்ட ட்விட்டர் நிறுவனம்

Jagame thanthiram Actor dhanush
By Petchi Avudaiappan Jun 04, 2021 10:29 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in சினிமா
Report

நடிகர் தனுஷ் நடித்துள்ள ஜகமே தந்திரம் படத்திற்கான சிறப்பு எமோஜியை ட்விட்டர் நிறுவனம் வெளியிட்டுள்ளது. 

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள படம் ஜகமே தந்திரம். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படத்தில் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, ஐஸ்வர்யா லட்சுமி, கலையரசன், லால் ஜோஸ், ஆகியோர் நடித்துள்ளனர்.

வரும் ஜூன் 18ஆம் தேதி நெட்பிளிக்ஸ் இணையதளத்தில் படம் வெளியாக உள்ள நிலையில் சில தினங்களுக்கு முன் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. 

ஜகமே தந்திரம் படத்திற்கு சிறப்பு எமோஜியை வெளியிட்ட  ட்விட்டர் நிறுவனம் | Twitter Release Special Emoji For Dhanush Movie

இந்நிலையில் ஜகமே தந்திரம் படத்திற்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில் ட்விட்டர் நிறுவனம் சிறப்பு எமோஜியை வெளியிட்டுள்ளது. மீசை, கூலிங் கிளாஸ் உடன் இருக்கும் அந்த எமோஜியை தனுஷ் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

கடைசியாக நடிகர் விஜய் நடித்த மாஸ்டர் படத்திற்கு சிறப்பு எமோஜியை வெளியிட்டு ட்விட்டர் என்று சிறப்பு சேர்ந்திருந்தது.