ட்விட்டரின் புதிய சிஇஓ பராக் அகர்வாலின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

twitter salary ceo paragagarwal
By Thahir Dec 02, 2021 12:40 PM GMT
Report

பிரபலமான சமூக வலைத்தளங்களில் ஒன்றான ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக கடந்த 2017ம் ஆண்டு முதல் வகித்து வந்த ஜாக் டோர்சி பதவி விலகுவதாக அண்மையில் அறிவித்திருந்தார்.

அதை தொடர்ந்து ட்விட்டரின் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக இருந்து வந்த இந்திய வம்சாவளியை சேர்ந்த பராக் அகர்வால் புதிய தலைமை செயல் அதிகாரியாக பொறுப்பேற்றார்.

இந்த நிலையில் ட்விட்டரின் தலைமை செயல் அதிகாரியாக பொறுப்பேற்றுள்ள பராக் அகர்வாலுக்கு ஆண்டுக்கு 1 மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.7.5 கோடி) ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதன் மூலம் சிலிக்கான் பள்ளத்தாக்கு தலைமை நிர்வாக அதிகாரிகளின் குழுவில் சேர்ந்துள்ளார் பராக்.

இந்த பட்டியலில் ஏற்கனவே சுந்தர் பிச்சை, சத்யா நாதெல்லா ஆகியோர் இடம்பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.