என்ன தான் ஆச்சு எலன் மஸ்கிற்கு - மீண்டும் ட்விட்டர் லோகோ மாற்றம்
அண்மையில் ட்விட்டரின் அடையாளமாக இருந்த குருவி லோகோவை மாற்றிவிட்டு நாய் ஒன்றின் லோகோவை வைத்து ட்விட்டர் பயனர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார் அந்நிறுவன உரிமையாளர் எலான் மஸ்க்.
குருவி படம் மாற்றம்
இந்த நிலையில் அவர் மீண்டும் குருவி படத்தை ட்விட்டர் லோகோவாக மாற்றியுள்ளார்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ட்விட்டரை வாங்கியதில் இருந்து முக்கிய நிர்வாகிகள் மாற்றம், பணியாளர்கள் நீக்கம், புளூ டிக்கிற்கு கட்டணம் என தினம் தினமும் தலைப்பு செய்திகளில் இடம்பிடித்து வருகிறார் எலான் மஸ்க்.
இந்த நிலையில்தான் கடந்த ஏப்ரல் 4ம் தேதி அவர் ட்விட்டரின் அடையாளமாக கருதப்படும் குருவி லோகோவை மாற்றி நாயின் படத்தை வைத்தார்.

மீண்டும் லோகோ மாற்றம்
இந்த நாயின் லோகோ டோஜேகாயின் எனப்படும் கிரிப்டோகரன்சியின் அடையாளமாக இருந்த நாயின் உருவப்படம் ஆகும்.
எலான் மஸ்கும் கிரிப்டோகரன்சிக்கு ஆதரவாக உள்ளவர்தான். இதன் காரணமாக பயனர்கள் இந்த நாய் லோகோவிற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இந்த சூழலில் மீண்டும் பழைய குருவியையே ட்விட்டரின் லோகோவாக மாற்றி மஸ்க் அந்தர்பல்டி அடித்துள்ளார்.