ட்விட்டர் லோகோ நாயாக மாறியதற்கு இதுதான் காரணம்?

Twitter Elon Musk
By Sumathi Apr 06, 2023 10:44 AM GMT
Report

ட்விட்டர் லோகோவை நாயின் படமாக மாற்றியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ட்விட்டர் லோகோ

ட்விட்டர் லோகோவான நீல நிற குருவி என்பது அமெரிக்காவின் மிகவும் பிரபலமான கூடைப்பந்தாட்ட வீரர் Larry Birdக்கு மரியாதை செய்யும் வகையில் வைக்கப்பட்டதாக சொல்லப்பட்டது. அது மட்டும் இல்லாமல் குருவிகள் கீச்சிடும் சத்தத்தை ஆங்கிலத்தில் tweet tweet என்றே கூறுவார்கள்.

ட்விட்டர் லோகோ நாயாக மாறியதற்கு இதுதான் காரணம்? | Twitter Logo Changed Issue Reason

அதனால் தான் ட்விட்டரில் நாம் இடும் பதிவுகள் ட்வீட் எனப்படுகின்றன. இந்நிலையில் எலான் மஸ்க் ட்விட்டர் லோகோவை குருவிக்கு பதிலாக நாயின் படமாக மாற்றினார். இதற்கு டிவிட்டரை மஸ்க் வாங்குவதற்கு முன்பு நடந்த சம்பவமே காரணம்.

காரணம்?

ஒரு நபர் மஸ்கின் டிவிட்டர் பக்கத்தில் டிவிட்டரை வாங்கி அதன் லோகோவை சிம்ஸ் நாயாக மாற்றிவிடுங்கள் என்று கமெண்ட் செய்திருந்ததைத் தொடர்ந்து உண்மையிலேயே டிவிட்டரை வாங்கிவிட்டார் எனக் கூறப்படுகிறது.

தொடர்ந்து, ட்விட்டரை குறித்து வெளியாகும் தகவலுக்கு விமர்சனங்கள் எழும் நிலையில், இவற்றை எல்லாம் மஸ்க் தெளிவாக திட்டமிட்டு தான் செய்கிறார், இதனால் அவர் வேறு வகைகளில் லாபம் அடைகிறார் என்கின்றனர். மேலும், நாய் சின்னம் பொறித்த டோஜ்காயின் cryptocurrencyக்கு அவர் மறைமுகமாக உதவுகிறார் எனச் சொல்லப்படுகிறது.