#மன்னிப்பாவது_மயிராவது- டிரெண்டாகும் ஹேஷ்டேக்கின் பின்னணி என்ன?

kamal stand wrong
By Jon Mar 02, 2021 07:02 PM GMT
Report

சமூகவலைத்தளமான டுவிட்டரில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனுக்கு ஆதரவாக #மன்னிப்பாவது_மயிராவது என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. தமிழகத்தில் அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், கமல்ஹாசன் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். திமுகவுடன் கூட்டணி என்றெல்லாம் செய்திகள் வெளியான நிலையில், சில நாட்களில் உறுதியான தகவல்கள் கிடைக்கப்பெறலாம் என தெரிகிறது.

இந்நிலையில் சென்னையில் நடந்த மக்கள் நீதி மய்யத்தின் 4ம் ஆண்டு தொடக்கவிழாவில் கலந்து கொண்ட கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்தித்து அவர்களுடைய கேள்விகளுக்கு பதிலளித்தார்.

அப்போது ரஜினிகாந்தின் ஆதரவு கிடைக்குமா என்ற கேள்விக்கு, ரஜினி வாய்ஸ் கொடுக்க நினைத்தால் அவர் தான் கொடடுக்க வேண்டும், வாய்ஸ் என்பது கேட்டு பெறுவதல்ல, கூட்டணிக்கு தான் பேச்சுவார்த்தை தேவை என்றார். முதுமை காலத்திலும் அரசியலில் ஈடுபடுவீர்களா என்ற கேள்விக்கு, என்னுடைய முதுமை என்பது எப்படி இருக்கும் என எனக்கு தெரியாது, அந்த நாட்களில் என்னால் இயலாது.

நான் என்னுடைய வீல்சேரையும், முதுமையை பற்றியுமே பேசுகிறேன், கருணாநிதி மீது எனக்கு மிகுந்த மரியாதை உள்ளது என்றார்.

இந்நிலையில் கருணாநிதியை மிக இழிவுபடுத்தி பேசியதாகவும், உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டுமெனவும் கமெண்டுகள் தொடர்ந்து பதிவிடப்பட்டன. இதைப் பார்த்த நெட்டிசன்களோ, கமல்ஹாசன் எதுவும் தவறாக கூறவில்லை, அவர் யாரையும் இழிவுபடுத்தவுமில்லை என அவருக்கு ஆதரவாக #மன்னிப்பாவது_மயிராவது என்ற ஹேஷ்டேக்கில் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.