ட்விட்டர் இப்பத்தான் ஒரு புத்திசாலிகிட்ட இருக்கு : எலான் மஸ்கினை புகழ்ந்த டிரம்ப்
ட்விட்டர் நிறுவனத்தை தற்போது எலான் மஸ்க் தன வசமாகியுள்ள நிலையில் அதன் முக்கிய அதிகாரியான பாரக் அகர்வால் ட்விட்டரை விட்டு வெளியேறினார்.
ட்விட்டரை வாங்கிய எலான் மஸ்க்
குறிப்பாக ட்விட்டர் வரலாற்றில் முக்கியமான சம்பவம் எதுவென்றால் முன்னாள் அதிபர் டிரம்பின் ட்விட்டர் கணக்கை வன்முறையினை தூண்டையதற்காக முடக்கியதுதான், சரவதேச அளவில் பேசு பொருளானது .

இதானால் கடுப்பான டிரம்ப் டுரூத் சோசியல் என்ற பெயரில் தனக்கென சொந்த சமூக வலைதளத்தை உருவாகினார். தற்போது எலான் மஸ்க் ட்விட்டரை வாங்கியுள்ளதால் டிரம்பின் மீது ட்விட்டர் கொடுத்துள்ள வாழ்நாள் தடையினை நீக்கலாம் என கூறுகின்றனர் சர்வதேச அரசியல் நிபுணர்கள்.
டிரம்ப் பாராட்டு
தற்போது எலான் மஸ்க் ட்விட்டரை முழுவதுமாக கைபற்றியதை பாரட்டி தனது சமூக வலைதளப்பக்கத்தில் பாராட்டியுள்ள டிரம்ப் : ட்விட்டர் தற்போது திறமையான மற்றும் புத்திசாலியான ஒருவரின் கைகளில் சென்றுள்ளது.
இனி நாட்டை வெறுக்கும் இடதுசாரி மனநோயளிகளின் கைகளில் தங்காது என குறிப்பிட்டுள்ளார்.
ஆக, டிரம்பின் இந்த பதிவின் மூலமாக ட்விட்டரில் டிரம்பின் ஆதிக்கம் இருக்கும் என்று கூறப்படுகிறது.