அரசின் உத்தரவை மீறினால் சட்டரீதியான நடவடிக்கைதான்- ட்வீட்டரை எச்சரிக்கும் மத்திய அரசு

farmer central genocide
By Jon Feb 05, 2021 03:06 AM GMT
Report

விவசாயிகள் போராட்டம் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது. இந்தநிலையில், விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாகவும், எதிராக ட்விட்டரில் நெட்டிசன்கள் தொடர்ந்து கருத்து தெரிவித்துவருகின்றனர். விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக கருத்து பதிவிடுபவர்கள் சிலர் விவசாயிகள் இனப்படுகொலை என்பதைக் குறிக்கும் வகையில் #farmers genocide என்ற ஹேஷ்டேக்கைப் பயன்படுத்திவருகின்றனர்.

இதுதொடர்பாக, மத்திய அரசு ட்விட்டர் நிறுவனத்துக்கு எச்சரிக்கைவிடுத்தது. அதனையடுத்து, இந்த ஹேஷ்டேக்கைப் பயன்படுத்திய ட்விட்டர் கணக்குகளை ட்விட்டர் சஸ்பெண்ட் செய்தது. ஆனால், சிறிது நேரத்தில் அந்த கணக்குகளை ட்விட்டர் நிறுவனம் மீண்டும் செயல்பட அனுமதித்தது.இந்த நிலையில் ட்விட்டர் நிறுவனத்தை மத்திய அரசு மீண்டும் எச்சரிக்கை கொடுத்துள்ளது.

மத்திய அரசு வெளியிட்டுள்ள எச்சரிக்கையில், ட்விட்டர் நிறுவனம் இடைத்தரகராக செயல்படுவதாகவும், அரசின் உத்தரவு கீழ்படிவது ட்விட்டர் நிறுவனத்தின் கடமை என்றும். ட்வீட்டர் அரசின் உத்தரவை பின்பற்ற மறுத்தால் சட்டரீதியான விளைவுகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். ஆகவே, கோபத்தைத் ஏற்படுத்தும் வகையிலான ஹேஷ்டேக் உருவாக்கப்பட்டு உண்மைக்குப் புறம்பாக தகவல்கள் பரப்பப்பட்டுவருகிறது.

இனப்படுகொலை என்ற வார்த்தையைப் பயன்படுத்துவது பேச்சு சுதந்திரம் அல்ல. அது, சட்டம் ஒழுங்குக்கான எச்சரிக்கை என்று தெரிவித்துள்ளது.