முதல்வர் மு.க.ஸ்டாலின், முதல் தோனி வரை ட்விட்டர் புளு-டிக் அங்கீகாரத்தை நீக்கிய எலான் மஸ்க்
முதலமைச்சர் ஸ்டாலின் , அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ரஜினிகாந்த், விஜய், தோனி , விராட் கோலி என பல பிரபலங்களின் ப்ளூ டிக் அங்கீகாரத்தை டிவிட்டர் நீக்கியுள்ளது.
ட்விட்டர் செயலி
ட்விட்டர் செயலியை உலக பணக்காரர்களில் மிக முக்கிய நபரான எலான் மஸ்க் வாங்கிய பிறகு அதில் பல்வேறு அதிரடி மாற்றங்களை கொண்டு வந்தார். அதன்படி ட்விட்டரில் முக்கிய பிரபலங்கள் அவர்களின் அடையாளம் உறுதி செய்யப்பட்டு இலவசமாக புளு டிக் எனப்படும் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

அந்த புளூ டிக்கை கட்டணம் என அறிவித்து, யார் வேண்டுமானாலும் மாத தவணை செலுத்தி அடையாளங்களை சமர்ப்பித்து பெற்றுக்கொள்ளலாம் என அறிவித்து அதிர்ச்சியை கொடுத்தது ட்விட்டர் நிறுவனம் இந்த நிலையில் ட்விட்டர் நிறுவனம் தற்போது இந்திய பிரபலங்கள் டிவிட்டர் பக்கத்தில் இருந்து புளூ டிக் நீக்கப்பட்டுள்ளது,
புளூ டிக் நீக்கம்
முதல்வர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் பிரபலங்களின் டிவிட்டர் பக்க ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளது.

கிரிக்கெட் வீரர்கள் மகிந்திர சிங் தோனி, விராட் கோலி, ரோஹித் சர்மா, ரொனால்டோ , நடிகர்கள் ரஜினிகாந்த், ஷாருக்கான், விஜய், சிம்பு, தனுஷ், சிவகார்த்திகேயன், லோகேஷ் கனகராஜ், நடிகைகள் காஜல் அகர்வால், சமந்தா உள்ளிட்ட பலரது டிவிட்டர் கணக்குகளில் இருந்த ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளது. இதனால் அவர்களை பாலோ செய்யும் பயனர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்