இதுக்கெல்லாம் நான்தான் காரணம் மன்னிச்சிடுங்க : ட்விட்டர் ஊழியர்களிடம் மனமுருகிய ஜாக் டோர்சி

Twitter
By Irumporai Nov 06, 2022 02:33 AM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

ட்விட்டரிடம் ஊழியர்களிடம் அதன் முன்னாள் தலமை செயல் அதிகாரி ஜாக் டோர்சி மன்னிப்பு கேட்டுள்ளார்.

ஆட்களை குறைத்த ட்விட்டர்

உலகின் பிரபலமான சமூக வலைத்தளமான ட்விட்டர் நிறுவனத்தை உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் வாங்கினார், அதன் பிறகு ட்விட்டர் நிறுவனத்தின் முக்கிய நிர்வாகிகளை நீக்கினார்.

இதுக்கெல்லாம் நான்தான் காரணம் மன்னிச்சிடுங்க : ட்விட்டர் ஊழியர்களிடம் மனமுருகிய ஜாக் டோர்சி | Twitter Founder Jack Dorsey Apology

மேலும் உலகம் முழுவதும் ட்விட்டர் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் நடவடிக்கையைனை தொடங்கியது, இதில் ட்விட்டர் இந்தியா நிறுவன ஊழியர்கள் சுமார் 7 ஆயிரத்து 500 பேர் ஒரே நாளில் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனம் ஒரு நாளைக்கு ரூ 32 கோடியை இழந்து வருவதால் ஊழியர்களை குறைக்கும் நிலை வந்துள்ளதாகவும் இதை தவிர வேறு வழிய்ல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

மன்னிப்பு கேட்ட ஜாக்

இந்த நிலையில் ட்விட்டர் ஊழியர்களிடம் அதன் முன்னாள தலைமை செயல் அதிகாரி ஜாக் டோர்சி மன்னிப்பு கேட்டுள்ளார், இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் : ட்விட்டரில் கடந்த காலத்திலும் நிகழ்காலத்திலும் உள்ளவர்கள் வலிமையானவர்கள் மற்றும் நெகிழ்ச்சியுடன் உள்ளனர்.

எவ்வளவு கடினமான தருணத்திலும் அவர்கள் எப்போதும் ஒரு வழியைக் கண்டுபிடிப்பார்கள். பலர் என் மீது கோபமாக இருப்பதை நான் உணர்கிறேன். தற்போது ஏற்பட்டுள்ள இந்த சூழ்நிலைக்கு நான் பொறுப்பேற்கிறேன் அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.