போலிகளை தவிர்க்க புதிய திட்டம் : புதிய அப்டேட்டை கொண்டுவரும் ட்விட்டர்
ட்விட்டர் உலக அளவில் அரசியல் தலைவர்களும் சினிமா பிரபலங்களும் பயன்படுத்தி வரும் ட்விட்டர் தற்போது புதிய அப்டேட்டினை கொண்டு வந்துள்ளது.
ட்விட்டரை பயன்படுத்துவோருக்கு மாதத்தின் இறுதியில் அந்த குறிப்பிட்ட மாதத்தில் எத்தனை ட்வீட்டை பதிவிட்டுள்ளனர் என்பதை தெரிந்துகொள்ளும் விதத்தில் புதிய அப்டேட்டை கொண்டுவரவுள்ளது.
புதிய அப்டேட்
சிலருக்கு இந்த அப்டேட் வந்துள்ளதாகவும் சிலருக்கு விரைவில் வரும் எனவும் தெரிகிறது. இதன் மூலம் பயனர்கள் எந்த அளவுக்கு ட்விட்டரில் ஆக்டீவாக இருக்கிறார்கள் என்பதை அவரவர்கள் சுய பரிசோதனை செய்துகொள்ளலாம் என ட்விட்டர் குறிப்பிட்டுள்ளது.
ட்விட்டர் புதிய ரூல்ஸ்
இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத்தின் 4(d) விதிகளின் படி ட்விட்டர் நாட்டில் உள்ள பயனாளர்களின் புகார்கள் மற்றும் அதை கையாள்வது தொடர்பான மாதாந்திர அறிக்கையை அவசியம் வெளியிட வேண்டும்.
அனைவரும் தங்களின் எண்ணங்களை வெளிப்படுத்தவும், அதே வேளையில் துன்புறுத்தும், அச்சுறுத்தும் மனிதாபிமானமற்ற நடவடிக்கைகளை ட்விட்டர் நிறுவனம் என்றுமே அனுமதிக்காது என தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.