பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் திடீர் முடக்கம் - அதிர்ச்சி காரணம்!
ஆயிரக்கணக்கானவர்களின் பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் திடீரென முடக்கப்பட்டுள்ளது.
சமூக வலைத்தளம்
சமூக ஊடக வலைத்தளங்களான பேஸ்புக், ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவை உலக அளவில் ஆயிரக்கணக்கான பயனளர்களுக்கு திடீரென முடங்கியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக அமெரிக்காவில் உள்ள பயனாளர்களின் சமூக வலைத்தள கணக்குகள் தான் அதிகம் முடக்கப்பட்டுள்ளது.

இதில் பல பயனாளர்கள் தங்களால் புதிய ட்விட்களை பதிவிட முடியவில்லை என்றும், நீங்கள் ட்விட் அனுப்புவதற்கான தினசரி வரம்பை தாண்டி விட்டீர்கள் என்ற பிழை செய்தியையும் எதிர்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முடக்கம்
இதுகுறித்து, இந்த சிக்கலை பற்றி நாங்கள் அறிந்திருக்கிறோம். அதை சரி செய்வதற்கான முயற்சியில் தற்போது ஈடுபட்டுக் கொண்டிருக்கிறோம். உங்களில் சிலருக்கு டிவிட்டர் கணக்கு செயல்படாமல் இருக்கலாம்.
அதனால் ஏற்பட்ட சிக்கலுக்கு மன்னிக்கவும். இதை சரி செய்வதற்கு நாங்கள் விழிப்புடன் செயல்படுவோம் என்று ட்விட்டர் நிறுவனம் ஆதரவு தெரிவித்துள்ளது.