இந்தியாவின் பல இடங்களில் ட்விட்டர் இணையதளம் முடங்கியது - பயனாளர்கள் கடும் அதிருப்தி
இந்தியாவின் பல இடங்களில் ட்விட்டர் இணையதளம் முடங்கியதால் பயனாளர்கள் கடும் அதிருப்தியடைந்தனர்.
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்களால் பயன்படுத்தப்பட்டு வரும் சமூக வலைத்தளங்கள் அவ்வப்போது முடங்குவதும், அதன்பின் சில மணி நேரம் கழித்து மீண்டும் பழைய நிலைக்கு வருவதும் வழக்கம்.
இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் மிக முக்கிய ஒன்றான ட்விட்டர் தளம் நேற்று முடங்கியது. இதனால் பயனாளர்கள் ட்வீட்களை பதிவு செய்வதிலும், தகவல்களை பார்ப்பதிலும் பல சிக்கல்களை சந்தித்தனர்.
டவுண்டிடெக்டர் எனும் இணைய பயன்பாட்டை கண்காணிக்கும் அமைப்பு வெளியிட்டிருக்கும் தகவலின்படி, சுமார் 15,000க்கும் மேற்பட்டோர் ட்விட்டர் முடங்கியதாக புகார் தெரிவித்துள்ளதாகவும், இந்த சேவை முடக்கத்திற்கான காரணம் தெளிவாக தெரியவில்லை என்றும் கூறியுள்ளது.
இதற்கு சர்வர் பிரச்சனை காரணமாக இருக்கலாம் என்று கூறப்படும் நிலையில் இந்தியாவில் இதன் தாக்கம் குறைவாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.