ட்விட்டரை வாங்கும் முடிவு நிறுத்தி வைப்பு - எலான் மஸ்க் அறிவிப்பு

Twitter Elon Musk
By Swetha Subash May 13, 2022 10:51 AM GMT
Swetha Subash

Swetha Subash

in உலகம்
Report

பிரபல சமூக வலைத்தளமான ட்விட்டர் நிறுவனத்தை வாங்கும் முடிவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக எலான் மஸ்க் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

ட்விட்டரை 44 பில்லியன் டாலருக்கு வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட டெஸ்லா தலைமை நிர்வாகி எலான் மஸ்க், தனது முன்னுரிமைகளில் ஒன்று “ஸ்பேம் போட்களை” அகற்றுவது என்று ட்வீட் செய்த சில நாட்களுக்குப் பிறகு, ட்விட்டர் நிறுவனத்தை வாங்கும் ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக கூறியுள்ளார். 

ட்விட்டரில் மொத்தமுள்ள கணக்குகளில் 5% போலி கணக்குகள் இருப்பதால் ட்விட்டரை வாங்க எலன் மஸ்க் தயக்கம் காட்டுவதாக தகவல் கூறப்படுகிறது.

எலான் மஸ்கின் இந்த அறிவிப்பையடுத்து ட்விட்டர் நிறுவன பங்குகள் மதிப்பு 20 சதவீதம் வரை சரிந்தது குறிப்பிடத்தக்கது.