காங்கிரஸ் கட்சியின் ட்விட்டர் கணக்கு முடக்கம்

Congress Twitter Page
By Thahir Aug 12, 2021 05:03 AM GMT
Report

காங்கிரஸ் கட்சியின் ட்விட்டர் கணக்கு தற்போது முடக்கப்பட்டுள்ளது.

விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக கூறி காங்கிரஸ் கட்சியின் ட்விட்டர் கணக்கு தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, மாணிக்கம் தாகூர் உள்ளிட்ட 5 பேரின் ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.

இதனையடுத்து,மத்திய அரசு தலையீட்டால்தான் ட்விட்டர் கணக்குகள் முடக்கப்படுவதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாடியது.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் ட்விட்டர் கணக்கும் தற்போது தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது.