டிவிட்டர் சிஇஓ பராக் அகர்வாலின் மனைவி யார் தெரியுமா? - நீங்களும் தெரிஞ்சிக்கோங்க
டிவிட்டரின் புதிய சிஇஓ பராக் அகர்வாலின் பின்னணி குறித்த தகவல்கள் பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது.
பிரபலமான சமூக வலைத்தளமான ட்விட்டரின் தலைமை செயல் அதிகாரியாக கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் இருந்து வந்த ஜாக் டோர்சி பதவி விலகுவதாக சில தினங்களுக்கு முன் அறிவித்தார்.
இதனையடுத்து அந்த பதவிக்கு ட்விட்டரின் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக இருந்த இந்திய வம்சாவளி பராக் அகர்வால் பொறுப்பேற்றார்.இதன் மூலம் அவர் சிலிக்கான் பள்ளத்தாக்கு தலைமை நிர்வாக அதிகாரிகளின் குழுவில் சேர்ந்துள்ளார். இந்த பட்டியலில் ஏற்கனவே சுந்தர் பிச்சை, சத்யா நாதெல்லா ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.

இதனிடையே பராக் அகர்வாலுக்கு ஆண்டுக்கு 1 மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.7½ கோடி) ஊதியமாக பெறுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.அவரின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்துப் பெரிய அளவில் தெரியாத நிலையில் இவர் ஐஐடி பாம்பே-வில் பிடெக் மற்றும் ஸ்டான்போர்டு பல்கலைகழகத்தில் பிஹெச்டி முடித்துள்ளார்.
பராக் அகர்வாலின் மனைவியின் பெயர் வினிதா அகர்வாலா மருத்துவர் என்பது மட்டுமல்லாமல் ஸ்டான்போர்டு ஸ்கூல் ஆப் மெடிசின் கல்லூரியில் துணை மருத்துவப் பேராசிரியர் ஆக பணிபுரிகிறார். மேலும் அவர் Andreessen Horowitz என்ற வென்சர் கேப்பிடல் நிறுவனத்தில் மருத்துவச் சிகிச்சை, நோயறிதல் மற்றும் டிஜிட்டல் ஆரோக்கியம், பிரிவில் இருக்கும் நிறுவனங்களுக்கு முதலீட்டை ஈட்டும் முக்கியமான பணியைச் செய்து வருகிறார்.
இந்நிலையில் பராக் அக்ரவாலின் ட்விட்டர் கணக்கை அவர் சிஇஓவாக அறிவிக்கும் முன்பு வெறும் 24000 பேர் மட்டுமே பாலோ செய்திருந்த நிலையில் தற்போது 3,53,000 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.