நைஜீரியா அதிபருக்கு வந்த கோபத்தால் ட்விட்டருக்கு தடை :அதிர்ச்சியில் ட்விட்டர் நிறுவனம்

By Irumporai Jun 05, 2021 01:54 PM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

நைஜீரிய அதிபரின் ட்வீட் டர் பதிவை நீக்கியதால் அந் நாட்டில் ட்விட்டர் இயங்கஅந்த  நாட்டின் அதிபராக முகம்மது புஹார தெரிவித்துள்ளார்.

நைஜீரியாவில் கடந்த சில ஆண்டுகளாகஅரசுக்கு எதிராகஉள்நாட்டுப் போர் வரும்  சூழல் உள்ளது.

இந்த நிலையில் அதிபர் முகம்மது புஹாரி தனது ட்விட்டர் பக்கத்தில்ஒரு பதிவைனை பதிவிட்டார்:

அதில். 1967-1970 வரை நைஜீரியாவில் நடைபெற்ற உள்நாட்டு சண்டையை மேற்கொள் காட்டியிட்டிருந்தார்.

அரசுக்கெதிராக செயல்படும் இளைஞர்களுக்கு நைஜீரிய உள்நாட்டு போரில் ஏற்பட்ட இழப்புகள் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எங்களுடன் களத்தில் இருந்தவர்கள், போரை சந்தித்தவர்கள், அவர்கள் புரிந்துகொள்ளும் மொழியிலேயே நடத்துவார்கள் என குறிப்பிட்டிருந்தார்.

அதிபரின் இந்த பதிவிற்கு கடும் எதிர்ப்பு எழுந்ததால் ட்விட்டர் நிறுவனம் அதிபர் முகம்மது புஹாரியின் பதிவை நீக்கியது.

இதனால் ஆத்திரமடைந்த அதிபர் முகம்மது புஹாரி நைஜீரியாவில் ட்விட்டர் செயல்பட தடை விதித்துள்ளார்.

நைஜீரியாவில் ட்விட்டர் செயல்பட காலவரையறையற்ற தடை விதிக்கப்படுவதாக அந்நாட்டு அரசு நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இந்த அறிவிப்பு சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.