பாகிஸ்தான் அரசின் ட்விட்டர் கணக்கு இந்தியாவில் முடக்கம் : காரணம் என்ன?

Twitter
By Irumporai Mar 30, 2023 04:04 AM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

பாகிஸ்தான் அரசின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் ட்விட்டர் கணக்கு

சட்டப்பூர்வ கோரிக்கையை ஏற்று, பாகிஸ்தான் அரசின் ட்விட்டர் கணக்கு இந்தியாவில் பார்ப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக, சமூக ஊடகத் தளத்தில் அறிவிப்பு வெளியானதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் பாகிஸ்தான் அரசின் ட்விட்டர் கணக்கு நிறுத்தப்படுவது கடந்த ஆறு மாதங்களில் இது இரண்டாவது முறையாகும்.

பாகிஸ்தான் அரசின் ட்விட்டர் கணக்கு இந்தியாவில் முடக்கம் : காரணம் என்ன? | Twitter Account Pakistani Government Is Blocked

முடக்கியது யார்

கடைசியாக கடந்த அக்டோபர் 2022இல் இதேபோன்று பாகிஸ்தான் அரசின் ட்விட்டர் கணக்கு இந்தியாவில் முடக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்திய அதிகாரிகளால் பாகிஸ்தான் அரசின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு முடக்கத்திற்கு தெளிவான விளக்கம் இன்னும் தரப்படவில்லை.

நிறுவனத்தின் வழிகாட்டுதல்கள், நீதிமன்ற உத்தரவு போன்ற சரியான சட்டக் கோரிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் பாகிஸ்தான் ட்விட்டர் முழு கணக்குகளையும் நிறுத்தி வைக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது.

தகவல் தொழில்நுட்ப விதிகள், 2021 இன் கீழ் அவசரகால அதிகாரங்களை விதித்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.