எனக்கு உங்க ட்விட்டர் வேண்டாம் : முன்னாள் அதிபர் டிரம்ப் கருத்து
தனது ட்விட்டர் கணக்கு தொடங்கப்பட்டாலும், ட்விட்டருக்கு திரும்ப போவதில்லை என முன்னாள் அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் அவர்கள் சமூக வலைத்தளமாகிய ட்விட்டரின் விதிமுறைகளை மீறியதால் அவரது ட்விட்டர் கணக்கு நிரந்தரமாக முடக்கப்பட்டது.
இந்த நிலையில் தற்பொழுது சமூக வலைத்தளமான ட்விட்டர் கணக்கை உலகின் நம்பர் 1 பணக்காரராகிய எலன் மஸ்க வாங்கியுள்ளார். இது குறித்து பேசிய அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் .
ட்விட்டரை எலன் மஸ்க் வாங்கிய பிறகு தனது ட்விட்டர் கணக்கு மீண்டும் தொடங்கப்பட்டாலும் தான் மீண்டும் ட்விட்டருக்கு திரும்பப் போவதில்லை என தெரிவித்துள்ளார்.
மேலும் அடுத்த ஏழு நாட்களில் தனது சொந்த ட்ரூத் சோஷியல் ஸ்டார்ட் அப்பில் முறைப்படி அவர் இணைய போவதாகவும் கூறியுள்ளார்.அதே சம்யம் எலன் மாஸ்க் குறித்து பேசியுள்ள டிரம்ப், அவர் ட்விட்டரை நன்கு மேம்படுத்துவார், எலன் ஒரு நல்ல மனிதர் என தெரிவித்துள்ளார்.