தலை ஒட்டிப் பிறந்த இரட்டை குழந்தைகள் - அறுவை சிகிச்சை மூலம் போராடி வெற்றிகரமாக தலையை பிரித்த மருத்துவர்கள்..!

Brazil
By Nandhini Aug 02, 2022 02:12 PM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

பிரேசிலில் தலை ஒட்டி பிறந்த குழந்தைகள் அறுவை சிகிச்சை மூலம் இரண்டு தலைகளும் வெற்றிகரமாக பிரிக்கப்பட்டது.

ஒட்டி பிறந்த இரட்டை குழந்தைகள் மூளையின் ஒரு பகுதியையும், இதயத்திற்கு ரத்தத்தை மீண்டும் கொண்டு செல்லும் முக்கிய நரம்புகளை பகிர்ந்து கொண்டனர்.

விர்ச்சுவல் ரியாலிட்டி உதவியுடன் இணைந்த இரட்டையரை அறுவை சிகிச்சை நிபுணர்கள் குழு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்து தலைகளை பிரித்துள்ளனர். பிரதான அறுவை சிகிச்சைக்கு முன் ஒரு மெய்நிகர் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சுமார் 27 மணி நேரமாக மொத்தம் 100 மருத்துவ பணியாளர்கள் இந்த அறுவை சிகிச்சையில் ஈடுபட்டனர். 

தற்போது இது குறித்த செய்திகளும், வீடியோக்களும் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மருத்துவர்களின் இந்த முயற்சிக்கு சமூகவலைத்தளங்களில் பாராட்டு குவிந்து வருகிறது.