இரட்டைக் குழந்தைகளை பெற்ற தாயே கிணற்றில் தள்ளிக் கொன்ற கொடூரம்
கேரளாவில் மூன்றரை வயதுடைய இரட்டைக் குழந்தைகளை கொன்று விட்டு தாய் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கேரளா மாநிலம் கோழிக்கோடு மாதா புறத்தை சேர்ந்தவர் ராஃபிக். கூலித்தொழிலாளி இவருடைய மனைவி சுபீனா. இந்த தம்பதிக்கு ஆண், பெண் என மூன்றரை வயதுடைய இரட்டைக் குழந்தைகள் இருந்தது.
உறவினர்களுக்கு போன் செய்த சுபீனா, குழந்தைகள் இருவரையும் கிணற்றுக்குள் வீசிவிட்டதாகவும், தானும் கிணற்றுக்குள் குதித்து தற்கொலை செய்து கொள்ளப்போவதாகவும் கூறியுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து பார்த்துள்ளனர். அப்போது கிணற்றின் மோட்டார் பைப்பை பிடித்து கொண்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.
குழந்தைகள் இருவரும் உயிரிழந்த நிலையில் தண்ணீரில் மிதந்துக்கொண்டிருந்தனர். இதனையடுத்து உறவினர்களின் தகவல் அடைப்படையில் காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று சுபீனா-வை உயிர் உடன் காப்பாற்றி உள்ளனர். குழந்தைகள் இருவரையும் சடலமாக மீட்டுள்ளனர்.
தொடர்ந்து குழந்தைகள் உடலை பிரேத பரிசோதனைக்காக கோழிக்கோடு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார், சுபீனா-வை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
முதல் கட்ட விசாரணையில், சபீனா சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என தெரியவந்துள்ளது. எனினும் தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.