இளைஞரின் வயிற்றிலிருந்து இரட்டைக் கரு அகற்றம்
உத்தரபிரதேசத்தை சேர்ந்த இளைஞர் நரேந்திர குமார்(18).
இவர் கடுமையான எடை இழப்பு, தீராத வயிற்று வலி மற்றும் வாந்தியால் அவதிப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஒரு அரிய ஒட்டுண்ணி இரட்டை (Parasitic Twin) 18 ஆண்டுகளாக அவர் வயிற்றில் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

கர்ப்பத்தின் ஆரம்ப காலத்திலேயே அந்த இரட்டை முழுமையாக வளராமல், மற்றொரு குழந்தையின் உடலுக்குள் உறிஞ்சப்பட்டதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
கருவில் உள்ள கரு என்று அழைக்கப்படும் இந்த அரிய நிலையில், முழுமையாக வளராத இரட்டை குழந்தை, மற்றொரு குழந்தையின் உடலுக்குள் ஒட்டுண்ணியாக வாழ்ந்து வரும்.
நரேந்திர குமாரின் உடலுக்குள் இருந்த அந்த ஒட்டுண்ணி இரட்டைக்கு 2.5 கிலோ எடை இருந்ததுடன், முடி, பற்கள் மற்றும் எலும்புகளும் இருந்தன.
மேலும், அந்த கருவை மருத்துவர்கள் அதிநவீன அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக அகற்றினார்கள்.