இந்தியாவில் நடைபெறவிருக்கும் டி20 உலகக் கோப்பை இடம் மாற்றப்படுகிறதா?

India BCCI T20 World Cup
By mohanelango Jun 06, 2021 10:07 AM GMT
Report

ஐசிசி நடத்தும் ஏழாபது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் கொரோனா இரண்டாவது அலை பாதிப்பு காரணமாக இந்த போட்டி இந்தியாவில் அரங்கேறுவதில் சிக்கல் எழுந்துள்ளது. 

20 ஓவர் உலக கோப்பையை நடத்தும் முடிவை எடுக்க ஒரு மாதம் கால அவகாசம் வழங்க வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் கோரிக்கை வைத்திருந்தது.

அதன்படி இந்தியாவில் இந்த போட்டியை நடத்த முடியுமா? என்பது குறித்து பரிசீலனை செய்து முடிவை வருகிற 28-ந் தேதிக்குள் தெரிவிக்க இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு கெடு விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்தியாவில் போட்டியை நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டால் மாற்று இடமாக ஐக்கிய அரபு அமீரகம் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறது.

ஏற்கனவே பாதியில் நிறுத்தப்பட்ட ஐ.பி.எல் போட்டிகளும் செப்டம்பர் மாதம் ஐக்கிய அரபு எமீரகத்தில் தாண் நடக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.